Login

Lost your password?
Don't have an account? Sign Up

History of Mayiladuthurai|Tourist places near mayiladuthurai|“முழுக்குகடை”மயிலாடுதுறை|Kutty story

மயிலாடுதுறை (Mayiladuthurai) (முன்பு மாயவரம் என்று அழைக்கப்பட்டது) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிர்வாகத் தலைமையிடமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் மயூரம் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி”முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்குகடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.l

https://www.mayiladuthuraidistrict.com

7 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*