மயிலாடுதுறை மாவட்டம்

‘மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய கால்நூற்றாண்டு கால தொடர் போராட்டத்திற்கு தமிழக அரசு செவிசாய்த்திருப்பது நிம்மதி அளிக்கிறது.

அதே நேரத்தில், ‘மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கப்படும்’ என்ற அரசின் உறுதியான அறிவிப்பு மட்டுமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக வஞ்சிக்கப்பட்டு கிடக்கும் மயிலாடுதுறை கோட்டப்பகுதி மக்களுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும்.

எனவே, ‘பரிசீலிக்கிறோம்’ என்ற செய்தியைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ‘மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கப்படும்’ என்று அறிவிக்கும் நாளில் தான் எங்களுடைய கோரிக்கை முழுமையடையும். இதனால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சியும் முழுமையானதாக மாறும்.

மயிலாடுதுறை கோட்டத்தில் இருக்கிற மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்களுக்குட்பட்ட மக்களும் மகிழ்ச்சியடைவார்கள். அந்த நாளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

இந்த நேரத்தில் ‘மயிலாடுதுறை மாவட்டம்’ அமைய வேண்டும் என்பதற்காக ‘மாயூரயுத்தம்’ இயக்கத்தோடு இணைந்து களத்தில் நின்று போராடிய
வணிகர் சங்கங்கள், சேவை அமைப்புகள், அரசியல் கட்சியினர், அரசு அலுவலர்கள், விவசாய அமைப்பினர், நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தினர், வழக்கறிஞர்கள், மூத்த குடிமக்கள் அவையினர், ஓய்வு பெற்றோர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தை அமைத்தே தீருவோம் என்பதில் உறுதியாக நின்று போராடிய என் பேரன்பிற்குரிய ‘காவிரி’ அமைப்பின் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், பல்வேறு துறைசார்ந்த நண்பர்களுக்கும் ‘மாயூரயுத்தம்’ இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கோமல் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *